கடை திறந்த ஒரே நாளில் இவ்வளவு கோடி வருவாயா?
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்தது. நேற்று (14.6.2021) காலை 10 முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டது.
கடை திறந்தது முதலே விற்பனை படுஜோராக நடைபெற்றது. பாதுக்காப்பு விதிமுறைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு தமிழ்நாட்டில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் மண்டலம் வாரியான விற்பனை விபரங்களும் வெளியாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 42 கோடியே 96 லட்சம். திருச்சி மண்டலம் 33 கோடியே 65 லட்சம். சேலம் மண்டலம் 38 கோடியே 72 லட்சம். மதுரை மண்டலம் 49 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.