கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமா?

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி செலுத்துவது தான் தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதில், கொரோனா பாதித்து குணமைடந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானதாக இருக்கிறது என மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐதராபாத்தின் ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் 260 சுகாதாரப் பணியாளர்கள் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 5 வரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டிருந்தது. ஒரு நோய் இருக்கும்போது, உடலில் நினைவக செல்கள் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்தது.
தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன.
கொரோனாவால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அதனுடன் சேர்ந்து ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே ஆன்டிபாடிகள் அதிகளவில் உற்பத்தியாகிறது.