தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம்
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவரது பதவி ஓராண்டுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வருபவர் டெல்லியில் தமிழக அரசின் பிரதிநிதியாகத் தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இயங்கும் பொறுப்பு மிக்கவர்.
தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மத்திய அரசு சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் உள்ளவர்.
இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் தற்போது திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார்.
வரும் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ள நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.