தொடங்கியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.
மேலும், எம் எல் ஏக்கள் அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடாவைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற கொறடா பதவிக்கு கேபி முனுசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.