டாஸ்மாக் திறப்புக்கு அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில், மே 10 ஆம் தேதி முதல் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதலாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று பாதிப்பு குறைவான மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்ட இடமாக கோயம்பேடு சந்தை மாற உள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 9.655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று மாலைக்குள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டிவிடும் என்றார்.
கொரோனா தொற்று அதிகரித்தபோது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மது கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மதுக்கடைகளை திறக்க வருவாய் துறை தற்போது முடிவு செய்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது மதுக்கடைகளை திறந்து வைத்தவர்கள் இதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.