இனி தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்க போவதில்லை…எல். முருகன் அறிவிப்பு
தனியார் தொலைக்காட்சிகளில் தினமும் ஏதேனும் ஒரு பிரச்சனை குறித்து விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமானது.
இதில் அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த விவாதங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள் சில சமயங்களில் விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்டு.
இந்நிலையில், இந்த விவாத நிகழ்ச்சிகளில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் தற்காலிகமாகக் கலந்து கொள்ள மாட்டார்கள் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர். “இது மூன்று வருடத்திற்கு முன்பு எடுத்திருக்க வேண்டிய முடிவு. தாமதமானது தான் இருந்தாலும் சிறந்த முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.