தளர்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடுகள் தீவிரம்

தமிழத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உள்ளது. ஊரடங்கில் பொது மக்களில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் தொற்று அதிகமாகப் பரவும் அபாயம் இருந்தது.
இதனால், மே 24 ஆம் தேதி முதல் ஜூ 7 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர், ஜூ 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், இதன் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? என்று முதலமைச்சர் நேற்று (10.6.2021) ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் தொடராது என்றும் மற்றும் மாநிலங்களில் மேலும், சில தளர்வுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை முதலமைச்சர் இன்று (11.6.2021) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தொற்று குறைவான இடங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.