அதிகமாக பாதிக்கப்படும் குழந்தைகள்… கொரோனா மூன்றாவது அலையா?

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்படும் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால், இந்த பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முதல் அலையில் முதியவர்கள் அதிகமாகவும், இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகமாகவும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகாம பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட 682 குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால், இது கொரோனா மூன்றாவது அலையா என்ற பயம் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை சுகாதாரத் துறை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.