வாகனங்களுக்கு பாடைகட்டி விநோத போராட்டம்!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் இன்று(11.6.2021) பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 97 ரூபாய்19 காசுகளுக்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூரில் இன்று பெட்ரோல் விலை 26 பைசா, டீசல் விலை 27 பைசா உயர்ந்துள்ளது. இதனால் கடலூர் நகர பகுதியில் பெட்ரோல் 99 ரூபாய் 13 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 28 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. குமராட்சி பகுதியில் பெட்ரோல் 99 ரூபாய் 52 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, தென்காசி மாவட்டம் நகர புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் பழனி தலைமையில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…