ஊராட்சி மன்றத் தலைவரை அவமதிப்பு செய்தவரை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஏழுமலை. இவருக்கும் அதே பகுதியின் ஊராட்சி செயலாளராக உள்ள வேல்முருகன் என்பவருக்கும் இடையே நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
மேலும், வேல்முருகன் சாதி ரீதியான பாகுபாட்டையும் ஏழுமலையிடம் காட்டியுள்ளார்.
இதனால், வருத்தமடைந்த ஏழுமலை, இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ஊராட்சி மன்ற செயலாளரான வேல் முருகன் தன்னை சாதி ரீதியாக பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அவமரியாதை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அதிகாரிகள் இந்த புகாரினை விசாரித்து ஆட்சியருக்கு அறிக்கை சமர்பித்தனர். விசாரணையில், வேல்முருகன் அவமரியாதையாக ஏழுமலையை நடத்தியது உறுதியானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.