ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஆலோசனை

தமிழத்தில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உள்ளது. ஊரடங்கில் பொது மக்களில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் தொற்று அதிகமாகப் பரவும் அபாயம் இருந்தது.
இதனால், மே 24 ஆம் தேதி முதல் ஜூ 7 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர், ஜூ 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், இதன் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? என்று முதலமைச்சர் இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.