மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணத்திற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அறிவிப்பை வெளியிட்டார். அவர்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கும் பேருந்துகளில் இலவச பயணத்திற்கான அரசாணையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் துணையாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவர்களது துணையாளர் ஒருவருடன் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.

ஆனால், இச்சலுகையை பெற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…