தடுப்பூசி போட்டுக்கொண்டால் எல்லாம் ஒரே நாளில் முடிந்து விடும்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகமாகப் பரவி வரும் தொற்றுபாதிப்பைக் குறைக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனாலும், பொதுமக்கள் சிலரிடம் தடுப்பூசி போடுக்கொள்ள தயக்கம் நீடித்து வருகிறது. இதனைப் போக்குவதற்காக பல கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டுகிறது.
அந்த வகையில், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி, “சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாராத்துடன் வருபவர்களுக்கு சரியான ஆவணங்களுடன் பிளான் அப்புரூவல், பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள், இதர சான்றுகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரே நாளில் ஆய்வு செய்து வழங்கப்படும்.
இவைத் தவிர தடுப்பூசி அதிகம் போட்டுக் கொண்டவர்கள் வசிக்கும் வார்டுகள், தெருக்களில் தேவைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் விதமாம இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பேரூராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.