கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி சேர்ப்பு

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கு மத்திய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து மாநில மக்களும் பயன்படுத்துவதற்காக இந்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் இணையதளத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்மொழி மட்டும் அதில் இடம்பெறவில்லை. இது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஒன்றிய அரசின் இணையதளத்தில் புதிதாக பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்மொழி மட்டும் இல்லை. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு, இணையதளம் படிப்படியாக மாநில மொழிகளில் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் 12 வது மொழியாக தமிழ்மொழியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *