பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் எடப்பாடி!
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல ஏழை எளிய மக்கள் உணவு கிடைக்காமல் வாடி வருகின்றனர்.
அவர்களுக்காக, நவம்பர் மாதம் வரை அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கான மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இடம்பெறாமல் இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த இணையதளத்தில் தமிழ்மொழியும் 12 வது மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவை அனைத்திற்கும் பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும்,
கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்”எனப் பதிவிட்டுள்ளார்.