மின் தடை புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை

கொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். மேலும், மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெறுகிறது.
ஆனால், சில இடங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், இது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்களித்துள்ளார்.
தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பொது முடக்கம் முடியும் வரை மின் தடைக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் மாதம் முதல் எவ்வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.
ஆனாலும், எந்த இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என புகார் தெரிவித்தால் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.