தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்படும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.

சில வாரங்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 35000த்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

இதனையடுத்து, மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 351 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 31,360 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் 1530 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, ஈரோடு, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *