கோவையிலும் தொற்று பாதிப்பு குறைகிறது…அமைச்சர் தகவல்

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

இதனையடுத்து, அங்கு தொற்று பாதிப்பை குறைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கொரோனா வார்டிற்கே சென்று நேரில் ஆய்வு செய்தார்.

கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட ஆய்வின் பலனாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி மிகவும் சிரமப் படுகிறார்கள். இதனாலேயே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களாக கரோனா தடுப்பு பணிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். மாநகரில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார்” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…