பார்சல் உணவுகளுக்கு ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உணவகங்களில், பார்சல் வாங்கும் உணவுகளைத் தவிர்த்து உட்கார்ந்து சாப்பிடும் உணவுகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பார்சல் வாங்கும் உணவுகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னையில் உள்ள உணவகம் ஒன்று வழக்கு தொடுத்திருந்தது. அதில், பார்சல் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து அவர், “”ஹோட்டல்களில் உணவு உண்ண வருபவர்களுக்காக மேஜைகளில் பகிரப்படும்போது அவர்களுக்காக ஹோட்டல் ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். உணவு சாப்பிட வாடிக்கையாளர்களுக்காக பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஹோட்டல்கள் வழங்குகின்றன.

அவர்கள் உணவை உண்டு முடித்து அதற்கான பில் போடும்வரை அவர்களுக்கு ஹோட்டல்கள் அளிக்கும் சேவைக்காக சேவை வரி விதிக்கப்படுகிறது.

ஆனால், பார்சல் உணவுப் பொருட்களுக்கு ஹோட்டல்களில் சேவை தரப்படுவதில்லை.

எனவே, அவை சேவை வரிக்குள் வராது. எனவே, ஹோட்டல்களில் பார்சல் மூலம் வாங்கும் உணவுப்பொருட்களுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது.

ஆகவே, பார்சல் உணவுகளுக்கு சேவை வரி விதிக்கும் ஜிஎஸ்டி துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *