புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் அதனைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
அதன்பிறகும் தொற்று பாதிப்பு குறையாததால் மே 24 ஆம் தேதி முதல் ஜூன்7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்னும் தொற்று பாதிப்பு குறையாத சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும் வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யவும் இ-பதிவு வலைத்தளத்தில் இ -பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவை உள்ளவர்களுக்கு இ-பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.