100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்!

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கொரோனா காலத்தில், ஏழை எளிய மக்களுக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஊரடங்கு சமயங்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இனி அனைத்து கோயில்களிலும் தமிழில் தான் அர்ச்சனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக, அனைத்து சாதியினருக்கும் கோயில் அர்ச்சகர் ஆவதற்கு பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சாரில் பாடசாலைகளும் தொடங்கப்பட்டு 206 பேர் பயிற்சியும் பெற்றனர்.

ஆனாலும், இந்த உத்தரவினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளினால் படித்து முடித்த மாணவர்கள் அர்ச்சகர் ஆகமுடியாமல் இருந்தது. இவற்றில் 2 பேருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டாலும் மீதமுள்ள 204 பேருக்கும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் , இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகம் ஆகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *