கரும்பூஞ்சைக்கு முதல்வர் பொது நிவாரண நிதி
தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மக்கள் நிம்மதியடைந்து வருகின்றனர்.
அதற்குள் தமிழகத்தில் கருப்பு பூஞ்சைத் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிகமாக கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோயில் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வாங்க தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.