புதுச்சேரியிலும் ரத்தாகும் பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடியுள்ளன. இதனால், தேர்வுகளும் குறித்த நேரத்தில் நடத்த முடியாத நிலை இருந்தது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் அச்சம் இன்னும் விலகாததால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாடத்திட்டங்களே புதுச்சேரியிலும் பின்பற்றப்படுவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுகிறது என அம்மாநில முதலைமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும், மதிப்பெண் வழங்கும் முறையும் தமிழகத்தைப் பின்பற்றி தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.