நட்சத்திர ஓட்டலில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

அண்மையில், எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஈபிஎஸ்க்கும் ஓபிஎஸ்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று(4.6.2021) சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருக்கும் அதிமுக செயலாளர்கள் ஒன்பது பேருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆனால், இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தனக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளார் ஈபிஎஸ் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.