அரசு அலுவலகங்கள் எவ்வளவு பணியாளர்களுடன் இயங்கலாம்?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் வைரஸ் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், ஜூன் 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு,பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.