கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு
தமிழகத்தில் முழு ஊரடங்கால் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும், சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமுள்ளதால் அந்த மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இன்று(5.6.2021) நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், அந்த மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகள் குறித்து கோவை ஆட்சியர் அலுவலத்தில் வைத்து, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வெ. இறையன்பு, “கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அவர்கள் சார்ந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் காக்கும் கேடயமாக தடுப்பூசிகள் விளங்குவதால் மக்களிடத்தில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய காரணங்கள் தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பரவல் முற்றிலும் குறைந்து தொற்றில்லா தமிழகம் என்ற நிலையை இலக்காக கொண்டு அனைத்து அலுவலர்களும் பணியாற்ற வேண்டும்” எனப் பேசியுள்ளார்.