எழுவர் விடுதலையில் முதலமைச்சர் உறுதி… சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இயக்குநர் பாரதிராஜாவும் இன்று(4.6.2021) முதலமைச்சரை நேரில் சந்தித்து, கொரோனாவிற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை அளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது. அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன.

குறிப்பாக, மருத்துவத் துறை அமைச்சர் அண்ணன மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.

மேலும், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரின் விடுதலைக் குறித்து முதலமைச்சரிடம் பேசினேன். தானும் அதில் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *