கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வேண்டும்…முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

இப்படி கொரோனா ஒருபுறம் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு உடனே 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *