அப்பாவின் நினைவு குறித்து கனிமொழி உருக்கம்

மறைந்த முதல்வர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனால், பலரும் கலைஞர் கருணாநிதி குறித்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், அவரது மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பாவின் நினைவு குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், “அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன” என பதிவிட்டுள்ளார்.