நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் இயக்கம்…சென்னைக்கு மீண்டும் பயணித்த மக்கள்

கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில், கொரோனா அச்சத்தால் ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதனால், பல ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மதுரை-சென்னை பகல்நேர ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் பயணிகள் வருகை குறைவால் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களின் தேவைக்காக மீண்டும் மதுரை-சென்னை பகல்நேர ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் நேற்று(1.6.2021) மீண்டும் இயக்கப்பட்டது.

குளிர்சாதனப் பெட்டியிலுள்ள 243 இருக்கைகளில் 46 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் மொத்தமுள்ள 1,704 இருக்கைகளில் 896 பேரும் என மொத்தம் 900 பயணிகள் சென்னைக்குச் சென்றுள்ளனர்.

இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது. மேலும், பாண்டியன், முத்துநகர், ஆனந்தபுரி, பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களும், பல்லவன் ரயிலும் வழக்கம் போல் தொடர்ந்து இயக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *