தமிழகத்தில் துளிர்விடும் நம்பிக்கை! சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அச்சமூட்டிய நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், தமிழத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அதிக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முழு ஊரடங்கை முறையாக கடைபிடித்த டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இதேபோல், தமிழகத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர், செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் பாதிப்பிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்து விட்டது. தற்போது 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.

ஜுன் மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. சுமார் 5 லட்சம் தடுப்பூசிகள் நேற்று வந்துள்ளன.8072 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 25 ஆயிரத்து 134 படுக்கைகள் நேற்று காலியாக இருந்தன. கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *