ரேஷன் கடைகளின் மளிகை தொகுப்பு விநியோகம்
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/05/MKStalin_PTI_8032021_1200-1-1.jpg)
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 13 பொருட்களுடன் சேர்ந்து மளிகைப் பொருட்களை அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்ப்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, 1 கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை; தலா, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு; தலா, 250 கிராம் புளி, கடலை பருப்பு; தலா, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாய்; டீ துாள், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு ஆகியவை வழங்கப்படவுள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை முதல் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் வீட்டிலேயே தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாருமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.