பிளஸ் 2 தேர்வு எப்போது?

இந்தியாவில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 12 ஆம் வகுப்பைத் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.
ஆனால், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால நலன் கருதி தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
மேலும், அனைத்து மாநிலங்களும் தேர்வை நடத்தும் முடிவிலே தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று(2.6.2021) சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதலைமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “ மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் ஆரோக்கியமும் முக்கியம். அதையும் கருத்தில் கொண்டு தான் ஆலோசனைகள் நடந்து வருகிறது.
கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின் இரண்டு நாட்களில் முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.