வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக மதுபான கடைகளுக்குஅரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு அவ்வாறு கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய முறையில் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

மதுபானம் விற்பவர்கள் அதற்காகவே தனியாக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்தக் குழுவில் தனக்கு என்ன மதுபானம் வேண்டும் என வாய்ஸ் மெசேஜ் செய்தால் போதும், குழுவின் அட்மின் மது பாட்டில்களின் விலை குறித்தும் அதனை எங்கு பெற வேண்டும் என்பது குறித்தும் தகவல் கொடுப்பார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் கிடைத்துள்ளது.

காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…