கோயில் பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு!

கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
இதன் காரணமாகவே தமிழக அறநிலையத்துறை அவர்களுக்கு இந்த 4000 ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கியுள்ளது.
மேலும் அவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று இந்த உதவித்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.