நிதி சுதந்திரத்தை பறிக்கும் மத்திய அரசு…கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு பாகுபாடுடன் பார்ப்பது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வாக்கு என்பது ஏற்கக் கூடியது இல்லை எனவும், வருவாய் அதிகம் உள்ள மாநிலங்களும் வருவாய் குறைவாக உள்ள மாநிலங்களும் சரியாக பார்க்கப்படுவது அநீதி எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் தேவை எனக் கூறியிருந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் மத்திய அரசு மீதான இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.