ஆவின் பால் விலை குறைப்பால் அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம்…பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் ஆவின் பால் விலை குறைப்பும் ஒன்று.

மக்கள் மத்தியில் இந்த ஆவின் பாலின் விலை குறைப்பு பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ரெட்டியார் பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையம், பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆவின் பால் விலை குறைப்பால் அரசிற்கு ரூ.270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அந்த இழப்பை சரி செய்யும் வகையில் முறையான திட்டமிடலுடன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பாலின் தினசரி விற்பனை 36 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது அது 39 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *