இளையராஜா பாடலுடன் இறுதி ஊர்வலம்!
பொதுவாக, நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களோ, உறவினர்களோ, குடும்பத்தில் உள்ளவர்களோ இறந்தால் அது வேதனையளிக்கக் கூடிய விஷயம் தான்.
ஆனால், மலேசியாவைச் சேரந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. குறிப்பாக, இளைய ராஜா ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது என்றே சொல்லலாம்.
இசை காற்றில் கலந்துள்ளது என்பார்கள். அவ்வாறு காற்றில் கலந்த தன் நண்பனுக்கு அவனுக்குப் பிடித்த இளையாராஜாவின் பாடல்களைப் பாடி, அவரது நண்பர்கள் விடையளித்துள்ளனர்.
தன் இறுதி ஊர்வலத்தில், இளையாராஜா பாடல் ஒலிக்க வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை என்பதால் அதனை அவரது நண்பர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.