ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் பிற பகுதிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு ஊசி போட்டு இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.