எனக்கும், என் கணவருக்கும் பரோல் அளிக்க வேண்டும்….முதல்வருக்கு நளினி கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறார் நளினி.

தற்போது அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிறைத்துறை மூலம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எனக்கும் என்னுடைய கணவருக்கும் 30 நாட்கள்பரோல் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

பரோல் குறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
சென்னையில் உள்ள தனது தாய் பத்மா வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும் மற்றும் இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும், மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என நளினி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *