தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

பிளஸ் டூ பொதுத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, ”தனியார் பள்ளிகள் பெற்றோரைக் கட்டாயப்படுத்தாமல் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்க வேண்டும். கொரோனா வைரஸால் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு தான் மாணவர் சேர்க்கை குறித்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *