பறந்து கொண்டே திருமணம்… சர்ச்சையில் தம்பதி!
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக திருமண விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பறந்து கொண்டே திருமணம் செய்த தம்பதியினர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மதுரையை சேர்ந்த ராகேஷ் – தர்ஷனா என்னும் இந்த தம்பதி பெங்களூரு – மதுரை செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை 2 மணி நேரம் வாடகை எடுத்து, தங்களுக்கு நெருக்கமான உரிமையாளர்கள் 161 பேருடன் திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் விமானத்தில் இத்தனை பேரும் திருமணம் நடத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது, அவர்கள் திருமணம் நடத்தப்போவதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என தெரிவித்தனர்.
இதனால், கொரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் ஆணையிட்டுள்ளது.