மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிங்க…7 பேரின் விடுதலை குறித்து தொல்.திருமாவளவன்!
நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் இந்த இக்கட்டான காலகட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பல தலைவர்களும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஏழு பேரின் விடுதலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தனது கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.
அதில் அவர், 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் வரும்வரை அந்த ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.