குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கி. ரா உடல் நல்லடக்கம்

’கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என போற்றப்படும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வயது மூப்பு காரணமாக, புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில், மே 16 ஆம் தேதி நள்ளிரவில் காலமானார்.

எழுத்து உலகிற்கு அவர் ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் விதமாக, அவருக்கு கோவில்பட்டியில், சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், கி. ராஜநாராயணின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்போது, அரசு அறிவித்தபடி துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி. ரா எனப்படும் கி. ராஜநாராயணின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *