ஓபிஎஸ்ஸின் சகோதரர் மரணம்!

முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. பாலமுருகன். இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை(14.5.2021) இறந்துள்ளார். இதனையடுத்து, ஓ.பி.எஸ் மற்றும் அவரது சகோதரர் குடும்பங்களுக்கு அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.