குழந்தை திருமணத்தை நிறுத்துங்கள்… அதிகாரிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

அட்சய திருதியை முன்னிட்டு குழந்தைத் திருமணம் நடைபெறுவதை தடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கொடுத்துள்ள அறிக்கையில் 2006-ஆம் ஆண்டு திருமணச் சட்டப்படி, 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். அட்சய திருதியையொட்டி குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது எனவும், எனவே அதை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகார்களை குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரிக்கு அனுப்பலாம் மற்றும் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2006 சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்துவோருக்கு 2 ஆண்டுவரை சிறைதண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…