செவிலியர்களுக்கு முதல்வர் வாழ்த்து

உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காலத்தில் செவிலியர்களின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில், அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் முதல்வர் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.