இனி ஐந்து மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து வாங்கலாம்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும், தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு முக்கிய மருந்தாக ரெம்டெசிவர் பார்க்கப்படுகிறது. இந்த மருந்தினை வாங்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்த வண்ணமே இருந்தனர்.
இந்நிலையில், தற்போது சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்தினைப் பெறலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மக்கள் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்கலாம் எனவும் , மருந்துகள் ஐந்து மாவட்டங்களில் வழங்கப்படுவதால் அவற்றை உரிய நேரத்தில் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.