இரண்டு தலைமைச் செயலர்களை வழங்கிய சேலம் மாவட்டம்!

தமிழகத் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்ஜன் பதவி மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலராக வெ.இறையன்பு பதிவியேற்றுள்ளார். வெ.இறையன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குடிமைப் பணித் தேர்வின் மூலம் தமிழக அளவில் முதலிடம் பிடித்து நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியராக பணியில் இணைந்தார்.

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசில் தற்போது வெ.இறையன்பு தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்திலிருந்து நியமிக்கப் படும் இரண்டாவது தலைமைச் செயலர் இவர் ஆவார். இவருக்கு முன்னதாக சேலத்தைச் சேர்ந்த கே.சண்முகம் முதல்முறை சேலத்திலிருந்து தலைமைச் செலயராக 2019 ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இரண்டு தலைமைச் செயலர்களை அளித்த பெருமை சேலத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *