டிராபிக் ராமசாமிக்கு சீமான் இரங்கல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். சமூக நீதி எங்கு சீர்குலைக்கப்பட்டாலும் அதற்காக பொது நல வழக்குகள் தொடரந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தவர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மறைவுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள்.

ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள்.

ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். சமூகத்தின் மீதான தனிமனிதரின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே ஐயா டிராபிக் ராமசாமி அவர்களின் செயல்பாடுகள் திகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம். ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *